உலகத் தமிழர்களுக்குப் பெருமைமிகு வரலாற்றுத் தருணம்! 

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நீதியரசர் நவநீதம் (நாவி) பிள்ளை அவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் அளவற்ற பெருமையையும் மகிழ்ச்சியையும் தரும் செய்தியாகும். 

இனவெறிக்கு எதிராகவும், மனித உரிமைகள், மனித கண்ணியம், சர்வதேச நீதி மற்றும் உலக அமைதிக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அவரது சாதனை, உலகெங்கும் உள்ள மக்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனை இன்று உலக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படுகிறது.இது நவநீதம்பிள்ளை அவர்களின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருக்குமான வெற்றியாகும்.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours