ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025–2029 இன் கீழ், நாடாளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டுள்ள 13 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மிக்க ஆட்சியை உறுதிப்படுத்தும் இந்த முக்கியமான பொறுப்பில், அவரது நாடாளுமன்ற அனுபவமும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தமிழ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கும் இரா.சாணக்கின் சேவையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours