சா.நடனசபேசன்
அம்பாறை
கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்
பணிப்பாளராகக் கடமையாற்றி வரும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன், கல்வி
நிர்வாக சேவையின் தரம் ஒன்றுக்கு உயர்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக்
கல்வியை குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து,
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில்
கல்வி கற்று, விஞ்ஞானப் பட்டதாரியானார்.
கல்வி
நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர்,
கல்முனை மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களில் கல்வி அபிவிருத்தி மற்றும்
கல்வி முகாமைத்துவப் பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்
பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
கல்வி
நிர்வாகத் துறையில் சிறந்த அனுபவத்தைக் கொண்ட இவர், குறித்த கல்வி
வலயங்களில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற
நேர்மையான நிர்வாகியாகத் திகழ்ந்துள்ளார்

Post A Comment:
0 comments so far,add yours