(ஆ.நிதாகரன்) பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் வாணி விழா இன்று(19.10.2026) வித்தியாலய அதிபர் தி.புவனேசராசா தலைமையில் இடம்பெற்றது.  இந்துக்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மீக மரபுகளைப் பறைசாற்றும் வகையில் வாணி விழா சிறப்பாக அனுஷ்ரிக்கப்படுகின்றது.

கல்விக்கும் கலைக்கும் அதிபதியான கலைமகளின் அருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் வலயக்கல்வி அலுவலக கல்வி மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.மதிதரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக   கலைமகளுக்கான விசேட வழிபாடுகளும் பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு கலைமகள் தேர் வீதிவலம் வருதல் நிகழ்வுகளும் நடைபெற்றன. 

மாணவர்களிடையே கல்வி மீதான ஆர்வத்தை வளர்ப்பதுடன், இந்து சமயப் பண்பாடுகள், பாரம்பரியங்கள் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் இவ்வாறான விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும், கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கும், சமய மற்றும் கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் இவ்விழா சிறந்த வாய்ப்பாக அமைந்தது.











 



Share To:

Post A Comment:

0 comments so far,add yours