19.11.2026

*எதிர்வரும் 22ஆம்  திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழைக்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.*


ஆனால் எதிர்வரும் 22ஆம் திகதி அல்லது 23ஆம் திகதியளவில் இலங்கைக்கு அண்மையாக ஒரு காற்று சுழற்சி வர இருப்பதன் காரணத்தினால் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை *மழைக்கு ஒரளவு சாத்தியம் உள்ளது.*


இதேபோன்று எதிர்வரும் 28ஆம் திகதியளவில் *மீண்டும் மேலும் ஒரு காற்று சுழற்சி* இலங்கைக்கு அண்மையாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதன் காரணத்தினால் பெரும்பாலும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 06ஆம் திகதி வரை ஓரளவு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


*சூறாவளி* - *அக்வான்*

*Cyclone - Akvan*


இதேவேளை மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் மையம் கொண்டிருந்த சூறாவளி அக்வான் ஆனது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 17km/h வேகத்தில் நகர்ந்து தற்போது, ஒரு தீவிர புயலாக *(Severe Cyclonic Storm)* வலுவடைந்து அதே பிராந்தியத்தில் இன்று மையம் கொண்டுள்ளது. 


இது 


Batticaloa இருந்து வடக்கு-வடகிழக்காக 930km தூரத்திலும்,


Trincomalee இருந்து வடகிழக்காக 680km தூரத்திலும்,


Kankesanthurai இருந்து வடக்கு-வட கிழக்காக 870km தூரத்திலும், 


Kankesanthurai இருந்து வடகிழக்காக 835km தூரத்திலும்,


Chennai (Tamil Nadu) இருந்து கிழக்கு-வடகிழக்காக 600km தூரத்திலும்,


Kalingapatnam (Andhra Pradesh) இருந்து தெற்கு-தென்கிழக்காக 350km தூரத்திலும், 

 

Gopalpur (Odisha) இருந்து தெற்காக 430km தூரத்திலும்,


Narsapur (Andhra Pradesh) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 390km தூரத்திலும், 

Puri (Andhra Pradesh) இருந்து தெற்காக 490km தூரத்திலும், தற்போது மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ச்சியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 20ஆம் திகதி பகல் North Andhra Pradesh, Yanam மற்றும் South Odisha கரையோர பிரதேசத்தில் Narsapur இற்கும் Puri இற்கும் இடையில் Gopalpur இற்கு அருகாமையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது மணிக்கு  90km முதல் 100km வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


க.சூரிய குமாரன், 

சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

Post A Comment:

0 comments so far,add yours