சுகாதார அமைச்சினால் மருத்துவ பீடத்திற்குரிய பௌதிக வளங்கள் மற்றும் இருதய நோய்க்குரிய தொழில்நுட்ப  இயந்திர வசதி, அவசர சத்திர சிகிச்சைக்கான புதிய கட்டிட வசதி என்பன மட்டக்களப்பு  வைத்திய சாலைக்கு வழங்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் புதிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (04) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக கடமையேற்ற நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது:-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் பௌதிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதுடன், பல மில்லியன் ரூபா செலவில் பெறுமதிமிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் காலத்திற்கேற்ப தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நோயாளர்களுக்குரிய தரமான வைத்திய சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. மருத்துவ கூட மாணவர்களுக்கான கற்கை  முறைகள் மேம்படுத்தப்படவுள்ளத்துடன்,

வைத்தியசாலையின் சகல ஊழியர்களுக்குமான செயற்பாடுகள்  மேம்படுத்தப்பட உள்ளது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours