(டினேஸ்)
மேற்படி வட்டார உறுப்பினரால் பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீதி புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தினூடாக 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இவ்வீதி புனரமைப்புப் பணிகள் புதூர் ஆனந்தா சனசமூக நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆகியவற்றின் இணைப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் திமிலைதீவு பிரதான வீதியின் 05ம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் வீதியாகப் புனரமைக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதூர் வட்டார உறுப்பினர் இரா.அசோக் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி வட்டார உறுப்பினரால் பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீதி புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தினூடாக 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இவ்வீதி புனரமைப்புப் பணிகள் புதூர் ஆனந்தா சனசமூக நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆகியவற்றின் இணைப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவ்வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தினை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன் மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours