திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் அக்கரைப்பற்று தம்பட்டை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கமலநாதன் நிசாப் ஜோஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை தம்பட்டை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் நீராடுவதற்காக ஆறு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் கடலலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours