அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய உயர்தானிகராலயத்தின் நிதி அனுசரனையில்கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் 2019 ஆண்டிற்கான புதிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்று (22.08.2019) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உதவிப் பணிப்பாளர் திரு வென் ரீவிஸ் அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகரான திரு. க~ன் சோவைட் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மா. உதயகுமார் மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி ச. புண்ணிமூர்த்தி மற்றும் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ப. முரளிதரன்; நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு. யோ. சிவயோகராஜன் வெளிக்கள அலுவலர் திருமதி கி. உதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் 2015/2018 காலப்பகுதியில் முறையற்ற விதமாக புலம்பெயர்பவர்களைகட்டுப்படுத்துவதற்காக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை
ஏற்படுத்தல் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் மற்றும்தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளினூடாக பெறப்பட்ட வெற்றிகள்
மற்றும் இத்திட்டத்தின் மூலம் மனித சமூக பொருளாதார மூலதனங்களை அம்கோர் நிறுவனம்எவ்வாறு கட்டியெழுப்பியுள்ளது என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக 90 குழுக்களை சேர்ந்த 914 பெண்களும் 468 இளைஞர் யுவதிகளும் பயனடைந்துள்ளார்கள் என்பதுகுறிப்பிடத்தக்க விடயமாகும் அத்துடன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அவர்களுடைய பொருளாதார தேவைகளில் தன்னிறைவுடன்இருப்பதன் காரணத்தால் இவர்கள் தேவையற்ற நுண்கடன் செயற்பாடுகளில் ரூடவ்டுபடுதல் மிகவும் குறைந்துள்ளது. இது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று எனவும்குறிப்பிடப்பட்டது.
இதன் போது அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகளும் எதிர்கால மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதுடன் இனிவரும் காலங்களில் முறையற்ற நுண்கடன் செயற்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான செயற்றிட்டங்களை
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அணுகுமுறை மூலம் செயற்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்களை பார்வையிடல் தொழில் பயிற்சி நிறுனங்களுடனான சந்திப்புகளும் இடம்பெற்றதுடன் முறையான நுண்கடன் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகமும் பார்வையிடப்பட்டது.
மட்டக்களப்பில் அம்கோர் நிறுவனத்தின் திட்டங்களை அவுஸ்திரேலிய
உயர்ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகள் பார்வையிட்டனர்
மட்டக்களப்பிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகள் கடந்த
காலங்களில் அம்கோர் நிறுவனத்தால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன்அமுல்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலைக்
கட்டுப்படுத்தலும் என்னும் திட்டத்தின் தற்போதைய செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில்
பார்வையிட்டனர்.இத்திட்டத்தின் மூலம் அம்கோர் நிறுவனத்தால் துறைநீலாவணைக்கிராமத்தில் உருவாக்கப்பட்ட
மகளிர் சுயஉதவிக் குழுக்களுடனான சந்திப்பு மற்றும் குழு அங்கத்தவர்களின் சுயதொழில்முயற்ச்சிகள் தொடர்பான கலந்துரையாடலும் இன்று (22.08.2019) துறைநீலாவணைக்கிராமத்தில்
இடம்பெற்றது.இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கானஉதவிப் பணிப்பாளர் திரு வென் ரீவிஸ் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின்ஆலோசகரான திரு. க~ன் சோவைட் ஆகியோருடன் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர்
திரு. ப. முரளிதரன்; நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு. யோ. சிவயோகராஜன் வெளிக்களஅலுவலர் திருமதி கி. உதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.சந்திப்பின் முடிவில் 2019 ஆண்டிற்கான குழு தரப்படுத்தில் அதிசிறந்த புள்ளிகளைப்பெற்ற குழுக்களுக்கான சான்றிதழ்களும் பண பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் குழு
அங்கத்தவர்களின் சுயதொழில்களும் அதிகாரிகளால் பார்வையிடப்பட்டது.
அம்கோர் நிறுவனத்தின் இளைஞர் யுவதிகளுக்கான திறன் அவிபிருத்தி செயற்றிட்டம்தொடர்பான கலந்துரையாடல்
அம்கோர் நிறுவனத்தால் 2015/2018 காலப்பகுதிகளில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின்
நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான திறன் அவிபிருத்திசெயற்றிட்டத்தில் சேவை வழங்குனர்களான அரச மற்றும் தனியார் தொழில் பயிற்சிநிறுவகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று 22.08.2019 மட்டக்களப்பில் உள்ளகிழக்கு தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் தொழில்பிரச்சனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தொழில் திறன் மற்றும் தொழில் வாய்ப்புக்கள்தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய இளைஞர்யுவதிகளுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான
உதவிப் பணிப்பாளர் திரு வென் ரீவிஸ் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின்ஆலோசகரான திரு. க~ன் சோவைட் ஆகியோருடன் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர்
திரு. ப. முரளிதரன்; நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு. யோ. சிவயோகராஜன் வெளிக்கள அலுவலர் திருமதி கி. உதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours