மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றுகாலை 9.30 மணியளவில் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் அரசாங்கஅதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.இணைக்குழுதலைவரானஆரம்பக்கைத்தொழில் சமூகவலூவூட்டல் இராஜாங்கஅமைச்சர் அலிஸாகீர் மௌலானா,மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன் இருவரின் தலைமையில் நடைபெற்றது.

இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இராஜாங்கஅமைச்சர் அலிஸாகீர் மௌலானாஉரையாற்றுகையில் இவ் அரசாங்கம் நான்குபூர்த்திசெய்தநிலையில் ஜனநாயகஊடகசுதந்திரம்,காணாமல் ஆக்கப்பட்டோரின்  அலுவலகம்,அயல் பாடசாலைசிறந்தபாடசாலைதிட்டம்,சிறந்தநிதிமுகாமைத்துவத்தின் கீழானஅபிவிருத்தப்பணிகள்,உயர் தரத்திலானவைத்தியசாலைப் பணிகள்,முக்கியமானமருந்துகளுக்கானவிலைக் குறைப்பு,சமூர்த்திஊக்குவிப்புதிட்டத்தில் இதுவரை 28000 குடும்பங்களுக்குசமூர்த்திகொடுப்பனவுவழங்கியமை,அதற்குமேலானஅரசசேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றஉத்தியோகத்தர்களுக்குசம்பளஉயர்வு,வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானஅளப்பரியசேவையினை இவ் அரசாங்கம் ஆற்றியதுஎனவும் அபிவிருத்திவேலைகளுக்குஒதுக்கீடுசெய்கின்றநிதிகளைநேர்த்தியாகவும்,சிறப்பாகவும்,நடைமுறைப்படுத்துகின்றஅரசஉத்தியோகத்தர்களுக்குபாராட்டையும் தெரிவித்தார்.

தொடர்ந்துபாராளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன்உரையாற்றுகையில் கடந்தகாலங்களைவிடஅதிகளவுநிதியினைக் கொண்டு மாவட்டத்தின் எல்லாபகுதிகளுக்கும் அபிவிருத்தியினைவிஸ்தரிக்க கூடியளவுஇவ் அரசாங்கத்துடன் செயற்பட்டிருக்கின்றோம் .என்றும்  இம்முறை400 மில்லியன் ரூபாக்கள் அபிவிருத்திக்காகசெலவிடப்பட்டமைகுறிப்பிடத்தக்கதுஎனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட முன்னேற்ற மீளாய்வுகள் இடம்பெற்றது. இதில் குறிப்பாக விவசாயம்,மீன்பிடி, கால்நடை, வீதிஅபிவிருத்தி,கம்பெரலிய,என்டப்பிறைஸ் சிறிலங்கா,ஆகியவற்றைமீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிரைவில் வேலைகளை முடிப்பதற் குநடவடிக்கைஎடுக்குமாறு குழு இணைத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் விசேடமாக வவுணதீவுபிரதேசத்தில் இருந்து பொலனறுவைமாவட்டத்திற்கு வனப்பகுதிக்கூடாக 37பாதை நிர்மாணிப்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றதுதொடர்பாக இச்சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.இதுவரை 7பாதைஅமைக்கப்பட்டுள்ளதாகவும் வனலாகாஅதிகாரிதெரிவித்தார். 

பாதையினூடாக சட்டவிரோத மணல் மண்,மாடுகள்,கடத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதுசுட்டிக்காட்டப்பட்டது. இதனை மாவட்ட அபிவிருத்திகுழுவின் அனுமதியின்றி செயற்படுத்துவதை மாவட்ட அபிவிருத்திக்குழு இடைநிறுத்தும்படியும் மூவர் அடங்கியகுழுவினைஅமைத்துதீர்வுஎட்டும் வரைநிறுத்திவைக்கதீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விசேடவேலைத்திட்டத்தில் 5 பிரதேச செயலகங்களுக்குபுதியகட்டிடம் அமைத்தல்,மாவட்ட செயலகத்துக்கு புதியகட்டிடம் 804 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டு வருகின்றது.அதனைதுரிதப்படுத்தும் படியும் சபையில் வேண்டப்பட்டது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours