அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா ஒக்லாந்தின் Uptown பகுதியில் கொள்ளை சம்பவம் ஒன்றின் போது இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்ட போதிலும் அதனை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.இந்த சம்பவத்தில் 32 வயதான ஜனாத் லியனகே என்பவரே கொல்லப்பட்டுள்ளார்
இலங்கையில் பிறந்த அமெரிக்கர் மீது இரவு 11:13 மணியளவில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அதிகாலை 1.01 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours