Articles by "வெளிநாடு"
Showing posts with label வெளிநாடு. Show all posts

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு  5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா  மற்றும் அக்கடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.  கண்டியைச் சேர்ந்த எல். தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

இலங்கையைச் சேர்ந்த  7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களை நயகரா சலுான் என்ட் அக்டமியின் இயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றுள்ளார். இதில் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றினார்கள்.







 சா.நடனசபேசன்


BUDS- UK    அமைப்பானது ஐக்கிய ராச்சியத்தில்  உள்ள கிழக்கு மாகாண மக்களால் உருவாக்கப்பட்டு கல்வி , வாழ்வாதார உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்கள் போன்ற   மனிதாபிமான பணிகளை  கடந்த 35 வருடங்களாக  முன்னெடுத்து வருகின்றது 

இவ் அமைப்பின்   வருடாந்த பொது கூட்டமானது 8.05.2022  லண்டன் வெம்பிளியில் நடைபெற்றது . இதன் போது  2022 - 2023  வருடத்திற்கான நிர்வாக குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்.

 நிருவாக சபை உறுப்பினர்கள் பின்வருமாறு Dr Alan Kangatharan, Asst. Secretary; Mrs Muriet Mariampillai, Secretary; Mr Uma Chandra, President; Mr V Paheerathan, Treasurer; Mr S Balamurali, Vice President; Mr Suman Sangaravel, Asst. Treasurer Standing, from left to right - EXCO Members: Mr V Shayanthan, Mr Jeyabelen, Mr T Suntharajah, Mrs Suja Koreira, Mr I Indrakumar, Mrs Ira Lakshman, Mr R Rajaratnam

இவ் அமைப்பானது யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்வி பொருளாதாரம் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது.

இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.

தடுப்பூசிச்சான்று

25.08.2021 சுவிற்சர்லாந்து அரசு விடுத்துள்ள முன் அறிவித்தலிற்கு அமைய புதிதாக உள்ளரங்குகள் அனைத்திலும் தடுப்பூசிச்சான்று கட்டாயமாக்கப்படலாம்.

மகுடநுண்ணிப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த சுவிற்சர்லாந்தின் அரசு எண்ணம்கொண்டு கலந்தறிதல் கூட்டத்தினை துறைசார் நோய்தொற்றுத் தடுப்பு வல்லுணர்களுடன் நடாத்திவருகின்றது.

இதன்படி 30.08.2021 புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது


 கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் பினூப்  ( வயது 30) இவர் கோழிக்கோட்டில் வேலைபார்த்து வந்தார்.  ஊரடங்கு அறிவிக்கபட்டதால்  சொந்த ஊருக்கு சென்று மனைவி குழந்தைகளுடன் இருக்க விரும்பினார். ஆனால் அவர் சொந்த ஊர் செல்ல பஸ் கிடைக்கவில்லை.


கோழிக்கோட்டில் இருந்து அவரது சொந்த ஊர் திருவல்லாவுக்கு 270 கிலோமீட்டர் 4 மாவட்டஙக்ளை கடந்து செல்ல வேண்டும். கோழிக்கோடு அருகே ஒரு பஸ் நிறுத்ததில் தனியார் பஸ் ஒன்று நின்று கொண்டு இருந்தது. சுற்றிலும் யாரும் இல்லை.   அந்த பஸ்சில் டீசலும் நிரப்பப்பட்டு இருந்தது. அந்த பஸ்சை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்.

ஆனால் இரவில் இரண்டு இடங்களில் போலீசார் அவர் திருடி சென்ற பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.  பதானம்திட்டாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர்  கூறினார். இதனால் போலீசார் அவரை செல்லும் படி கூறி விட்டனர். 

கோழிக்கோட்டை விட்டு வெளியேறி, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் வழியாக சென்று கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் புகழ்பெற்ற குமரகம்  சுற்றுலா இடத்தை அடைந்தபோது, அவரை குமரகம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடமும் அவ்வாறே அவர் கூறி உள்ளார். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்து விசாரித்த போது உண்மயை ஒத்து கொண்டார். போலீசார் அவரை கைது செய்து  பஸ்சை பறிமுதல் செய்தனர்.  

இதற்குள்  பஸ்சை காணவில்லை என அதன் டிரைவர்  குட்டியாடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். குட்டியாடி போலீசார் டினூப்பை கைது செய்து அழைத்து சென்றனர்.

தற்போது பினூப் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  
பாகிஸ்தான் – கராச்சியில் நேற்று (22) இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.விபத்திற்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
உயிர் தப்பிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஏனைய 5 பேரும் உயிரிழந்திருக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குமணன்

சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு, கொரோனா அனர்த்தத்தால் பாதிப்புற்றிருப்பவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அவசர சேவை உதவியாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பிரித்தானியாவில் உள்ள King Georges வைத்தியசாலை, Queens வைத்தியசாலை, Ilford பொலிஸ் நிலையம், Ilford அவசர சிகிச்சை பிரிவு மற்றும் The Lodge care home சமூக அமைப்பிற்கும் இவ்உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கையிலும் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பத்து வருடங்களுக்கு மேலாக பல சேவைகளை இலங்கையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது









சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம்  பெயர்ந்து  சுவிஸ் நாட்டில்  வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 6 வது  தடவையாக  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள 'ஊரும் உறவும்பொங்கல் விழா-2020 எதிர்வரும்  ஜனவரி 19 ஆம் திகதி  நாளை ஞாயிற்றுக்கிழமை  காலை 11 மணிக்கு தலைவர் சுதர்சன் தலைமையில் சுவிஸ் நாட்டின்  பேர்ன்நகரில் Primarschulhaus Bleiche strassl 3066 stettlen இல் இடம்பெறவுள்ளது.

இவ் வழாவிற்கு அனைத்து உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு சுவிஸ் உதயம் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது



பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் சுவிஸில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி ஐரோப்பா மண்ணிலே 2007 ம் ஆண்டில் சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் என்னும் சதுரங்க அமைப்பை உருவாக்கி, சுவிசின் பல மாகாணங்களில் சதுரங்க பயிற்சிகளை வழங்கி தமிழர்களிடையே சதுரங்க அறிவை புகட்டி இருந்தது. 


இத்தனை வேலைகளையும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் கந்தையா சிங்கம் அவர்களின் அயராத முயற்சியினால் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தாயக உறவுகளையும் ஒன்று சேர்த்து விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தாயக வீரர்களையும் உலகலாவிய ரீதியில் சாதனைகளை படைக்க அயராது பாடுபட்டு உழைத்து வருகிறார்.

தனது பாடசாலை காலத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மிகுந்த ஆர்வம் காட்டிய இவர் தற்போது தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்ற வேளையிலும் தனது நேரத்தில் ஒரு பகுதியை தன் இனத்திற்காக செலவழித்து சதுரங்கம் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் தொடர்ந்து நடத்தி வருகிறார் அதனொரு பகுதியாகவே அண்மையில் சுவிட்சர்லாந்தில் சதுரங்க போட்டியினை நடத்தியிருந்தார்கள்

 பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளிடையே போட்டிகளை நடத்தி சதுரங்க வீரர்களை ஒருங்கிணைத்து இருந்தது. தவிர்க்கமுடியாத காரணங்களால் 6 வருடங்கள் போட்டிகள் நடைபெறாது இருந்து மீண்டும் ஆரம்பித்திருப்பது தெரிந்து பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் 04.01.2020 ம் திகதி சுவிசில் சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது. காலை அக வணக்கத்துடன் அதன் தலைவர் திரு சிறி மற்றும் செயலாளர் ஜெயபாஸ்கரன் அவர்களது சிறு உரையுடன் போட்டி ஆரம்பமானது. 

 சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் அவர்கள் போட்டியினை நெறிப்படுத்தி அமைதியான முறையில் மிகச் சிறப்பாக முடித்தார். 

தொழில் நுட்பவியலாளராக திரு தில்லைராஜ் அவர்கள் கடைபுரிந்தார். இப் போட்டியிலே சிறுவர் முதல் பேரியோர் வரை பங்குபற்றி இருந்தனர். 10, 13, 16, Open என நான்கு பிரிவுகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சிறந்த பெண் போட்டியாளரும் தெரிவு செய்யப்பட்டார். 

சரியாக 10 மணிக்கு ஆரம்பமான இப் போட்டி 6 சுற்றுக்கள் நடைபெற்று மாலை 5 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. கலந்து கொண்ட வீர வீராங்கனைகள் மற்றும் பெற்றோர்கள் போட்டியின் ஒழுங்கமைப்பினை பெரிதும் பாராடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. 










(சா.நடனசபேசன்)


சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஊரும் உறவும்பொங்கல் விழா-2020 எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 11மணிக்குதலைவர்சுதர்சன்தலைமையில்சுவிஸ் நாட்டின் பேர்ன்நகரில் Primarschulhaus Bleiche strassl 3066 stettlen இல் இடம்பெறவுள்ளது.



தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின்போது இலங்கையின் கிழக்கு வாழ் மக்கள் சுவிஸ் நாட்டில் ஒன்று சேரும் தருணம் நிகழ்வதுடன் புதிய நட்பு உண்டாவதுடன் உறவுகள் ஒற்றுமைப்படுவதற்கும் பல்வேறான நன்மை தரும் விடயங்கள் நிகழவுள்ளதுடன் எதிர்காலத்தில் ஒற்றுமையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ப்படுவதற்கும் களம் அமையப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட இருப்பதுடன் பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் நடைபெற இருப்பதுடன் இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது 

அத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும்  படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் சுவீஸ் வாழ் ஈழத்து உறவுகள்  அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

தொடர்புகளுக்கு கே.துரைநாயகம் 0792415602 எஸ்.சுபாஸ்கோ  0787705126 ஏ.ராஜன் 0797541317 ஆர். விஜயகுமார் 0791754923  எம் .கரன் 0763294065 கா.தியாகு 0789355068 வி.பேரின்பராசா 0796069063. கஜன் 0779122051 ஆகியோர்களுடன்  தொடர்பு கொண்டு மேலதிகதகவல்களை அறிந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்   குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்




பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்

நெதர்லாந்தில் வித்துவான் வேந்தனாரின் நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வு 
 நேற்றைய தினம்  நெதர்லாந்தில் வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் நூல்கள் வெளியீட்டு விழா  குகன் குணரெத்தினம் அவர்களின் தலைமையில் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம் பெற்றது

இலண்டனில் இருந்து வருகை தந்த வித்துவான் வேந்தனாரின் மைந்தன் கணக்காளர் திரு. இளஞ்சேய் வேந்தனார், பிரான்சில் இருந்து வருகை தந்த சமூக சேவையாளர் குகன் குணரெத்தினம், தமிழர் கலாச்சார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து ஒருங்கிணைப்பாளர் திரு சாள்ஸ் குணநாயகம், மற்றும் திரு திருமதி சிறீஸ்காந்தவேள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. 

 அதைத் தொடரந்து வித்துவான் வேந்தனாரின் செந்தமிழ்த்தாய் வாழ்த்து திருமதி. பவானி சற்குணசெல்வம் அவர்களால் பாடப்பட்டதுடன் அகவணக்கம் செலத்தப்பட்டு, செல்வி. ஷாகித்யா சிவநேசன் அவர்களால்  வரவேற்பு நடனம் தரப்பட்டது. 

 திரு. ஏட்மன் அவர்கள் வித்துவானி்ன் பாடலை உணர்வுபூர்வமாகப் பாடியதைத் தொடர்ந்து லண்டனிலிருந்து வருகை தந்த வேந்தனாரின் மைந்தன் திரு. இளஞ்சேய் வேந்தனார் அவர்கள் வரவேற்புரை நடாத்தினார். அதைத் தொடர்ந்து தமிழர் கலாச்சார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து ஒருங்கிணைப்பாளர். திரு சாள்ஸ் குணநாயகம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பாடகர் நாதனின் இனிமையான குரலில் வித்துவானின் பாடல் ஒன்று பாடப்பட்டது

 இதனைத் தொடர்ந்து பிரான்சில் இருந்து வருகை தந்த குகன் குணரெத்தினம் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து, நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது . 

இலண்டனிலிருந்து வருகை தந்த திரு இளஞ்சேய் வேந்தனார் அவர்களால் தமிழன்பர்களுக்கு நூல்கள் கையளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திரு. குகன் குணரெத்தினம் தலைமையில் நூலுரைகள் இடம் பெற்றன. கலைஞர் தமிழ் ஆர்வலர் திருமதி. சாந்தா பாலகிருஷ்னன். வேந்தனாரும் குழந்தை மொழியும் என்னும் தலைப்பிலும் , கவிதாயினி. திருமதி. சிவகுமாரி ஜெயசிம்மன் வேந்தனாரின் கட்டுரைகள்.என்னும் தலைப்பிலும் , மொழிபெயர்ப்பாளர். திருமதி பவானி சறகுணசெல்வம் வேந்தனாரின் இராமாயண உரை என்னும் தலைப்பிலும், கவிதாயினி. திருமதி. நிரஞ்சலா றவிரதன். இறையருள்நிறை பூம்பொழில் என்னும் தலைப்பிலும், சைவத் தொண்டர் தமிழ் ஆர்வலர். திரு. K. சிவலிங்கநாதன் வேந்தனார் உரையாற்றிய மையும் குறிப்பிடத்தக்கது. சைவத் தொண்டர் தமிழ் ஆர்வலர். திரு. K. சிவலிங்கநாதன் வேந்தனாரும் சைவ நெறியும் என்னும் தலைப்பிலும்,கவிதாயினி. ஆசிரியை. திருமதி. விமலாதேவி சிவநேசன் வித்துவான் கண்ட பாரதியார் என்னும், தலைப்பிலும் நூலுரை இடம் பெற்றது.  இறுதியாக. திரு. இளஞ்சேய் வேந்தனார் அவர்களின் மிகவும் நீண்ட விளக்கமான ஏற்புரை இடம் பெற்றது.




பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் 
ஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து  பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது இனத்தின் அடையாளங்களையும் . வரலாறுககளையும் ஆவனப்படுத்துகின்ற செயற்பாடுகளில் இன்று பல ஈழத்து செயற்பாட்டாளர்கள் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் பாடல்கள், கவிதைகள் என தன் எழுத்துக்களால் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியூர் குரூஸ் அவர்களது காலக்கோடுகள் எனும் கவிதைத் தொகுப்பு  நேற்று பாரிஸ் நகரில் நடைபெற்றது 
இங்கு நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிதை நூல் வெளியீட்டரங்கு,. தற்போதைய காலகட்டத்தில் முகநூலின் செயற்பாடு ஊடகங்களின் வகிபாகம் பற்றியும் மற்றும்  வாழ்துக்கவிகள் என்பவற்றோடு நடன நிகழ்வுகளும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 
கவிஞர் பாலகணேசன் அவர்களது தமையில் இடம்பெற்ற வெளியீட்டரங்கில் கவிதைத் தொகுப்பு குறித்தான தமது உரைகளை, சமூக-அரசியல் பிரதிநிதிகளான பரா, இராஜன், யாழ்நிலா, மைக்கல் கொலின்ஸ், சுதன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.
கவிதைத் தொகுப்பினை வன்னியூர் குரூஸ் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை கவிஞர் பாலகணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து ஏற்புரையினை  வன்னியூர் கவிஞர் வழங்கிவைத்தமையும்.




சுவிஸ் உதயம் அமைப்பின் நிருவாகக் குழுக் கூட்டம்  சனிக்கிழமை தலைவர் டி. சுதர்சன் தலைமையில் சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள Belp எனும் இடத்தில் சுவிஸ் உதயத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது  செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உபதலைவர் கே.தியாகராசா உபபொருளாளர்  வி.பேரின்பராசா  உறுப்பினர்களான வி.ஜெயதரன் ,கே.கஜேந்திரன்,கே.தருமபாலன்,எம்.தியாழகரன்,எஸ்.பரமேஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சுவிஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் வரவு செலவு ஆராயப்பட்டதுடன்  சுவிஸ் உதயம் அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன அத்தோடு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற உதவித்திட்டம் தொடர்பாகவும் அத்தோடு இலங்கைக்கு வருகை தரவுள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர்கள் உதவிபெறுபவர்களை  சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக்  கிளையின் ஊடக நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.





படங்கள் வி.ரி.சகாதேவராஜா -காரைதீவு  நிருபர்

உலகப்பிரசித்திபெற்ற தஞ்சைப் பெருங்கோயிலைக்கட்டிய மாமன்னன் இராஜஇராஜசோழனின் 1034ஆவது ஆண்டு சதயவிழா செவ்வாயன்று(5) தஞ்சாவூரில் ஆரம்பமாகியது. 

தஞ்சாவூரை ஆண்ட இராஜஇராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை சதயவிழாவாக கொண்டாடுவது வழங்கம். அதன்பிரகாரத் தஞ்சைப்பெருங்கோவிலில் 1034வது சதயவிழா ஆரம்பமாகியது.
தமிழகத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் கதாப்பிரசங்கி பேராசிரியர் சுகிசிவம் பிரபல கவிஞர் உடையார்கோயில் குணா உள்ளிட்ட பெரு இலக்கியவாதிகள் கலந்கொண்டனர். காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலும் கலந்துசிறப்பித்திருந்தார். 

அங்கு வயலின் இசைக்கச்சேரி தொடக்கம் பலவகை கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. திருமுறைப்பண்ணிசை பண்ணிசை அரங்கம் இசையரங்கம் கருத்தரங்கு ராஜரரிசோழனின் பெருமபுகழுக்கு காரணம் ஆட்சி;த்திறனா பக்திப்பணியா என்றதலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

இராஜஇராஜசோழனின் பெருமையை எடுத்தியம்பும்வண்ணம் பலரதும் பேச்சு அமைந்திருந்தது. தமிழ்ப்பணிசெய்த பலரும் பொன்னாடைபோர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதன்போதான படங்கள்இவை.



பிரான்சில் வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்ஸ் Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாறு மாறாக உருண்டு சென்றுள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஓட்டுநர் உட்பட 32 பயணிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் இருந்து இரா. தில்லை நாயகம்


சுவிட்சர்லாந்தில் தாயக கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.


 நேற்று  மாலை பேர்ண்(Bern) மாநிலத்தில் உள்ள ஞானலிங்கேசுவரர் திருக்கோவிலின் சைவநெறிக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தாயகத்தின் மூத்த இசையமைப்பாளரான இசைவாணர் கண்ணன் அவர்களும் அவரது மகனான இசையமைப்பாளர் சாய்தர்சனும் வரவேற்கப்பட்டனர். 

 நிகழ்வில் சிறப்புரையை தாயகப் பாடகியான திருமதி. மணிமொழி கிருபாகரன் நிகழ்த்தியதனை தொடர்ந்து, திருக்கோவிலின் பிரதான குருக்களினால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப் பட்டனர். 

இதனைத் தொடர்ந்து இசைவாணர் கண்ணன் அவர்களுடன் இணைந்து கலைஞர்களினால் பக்தியிசை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவு பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர்.


 பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்ததால், இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ மூன்று ரயில் பெட்டிகளுக்கு பரவியுள்ளது.
பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்


யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமிழர் கலை. பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மரகதலிங்கம் வர்ணகுலசிங்கம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற தமிழர்களுகே உரித்தான கலை கலாசார பண்பாட்டு நிகழ்வில்
பிரதம விருந்தினராக  தாயகத்திலிருந்து வருகை தந்த (மட்டக்களப்பு) கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மரகதலிங்கம் வர்ணகுலசிங்கம் இந்த   ஆடற்கலை  அரங்க நிகழ்வுகள் பற்றியம் தனது ஆழமான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

பல வேலைச்சுமைகளுக்கு மத்தியில் தமிழர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை கண்டிக்காப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் முக்கியத்துவம் கொடுப்பதை இட்டு மனநிறைவு அடைகின்றேன். 

தாயகத்தில் யுத்தத்திற்கு முன்னைய காலத்திலும் சரி யுத்த காலத்திலும் சரி இந்தியக் கலைஞர்களுக்கு எந்த விதத்திலும் குறையாத அளவுக்கு எமது கலைஞர்கள் விளங்கியதோடு கலை பண்பாட்டு அடையாளங்களும் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

ஆனால் இன்று யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் எமது கலை பண்பாடு மிகவும் நலிவுற்ற நிலையிலேயே காணப்படுகிறது. திட்டமிட்ட முறையில் எமது கலை பண்பாடு சீரழிக்கப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது. 

உரிமைக்காகப்  போராடப் புறப்பட்ட நாம் இன்று எமது கலை பண்பாட்டைப் பாதுகாக்கவும் அடையாளங் களைப் பாது காக்கவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதாவது இன்று நாம் அரசியல் பலம் குறைந்தவர்களாக ஒரு உளவியல் யுத்தம் செய்ய வேண்டிய நிலையே காணப்படுகிறது.

புலம் பெயர் தேசத்தில் எப்படி கலையை வளர்த்து வருகின்றீர்களோ வடகிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்  கலைக்கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டிய அவசர நிலை தோன்றியுள்ளது. 

இதை புலம்பெயர் சமூகம் முன்னின்று நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்த அரங்கிலே உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன் என தெரிவித்தார்.

இன்று கலையையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் புலம் பெயர்ந்த சமூகத்திற்கு முன்னால் இருக்கும் பெரும் பொறுப்பாகவே நான் இதைக் கருதுகின்றேன் என அவர் கூறும்போது பலத்த கரவொலி மண்டப்ததை நிறைத்தது.

அதே வேளை போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த எத்தனையோ மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை தொடர முடியாத நிலையில்  அவதிப்படுகிறார்கள். பொருளாதா வசதியின்றி பல்கலை கழகப் புகுநிலையில் பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர முடியாது இருக்கின்றார்கள்.

 அவர்களில் சிலருக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு சில நல்ல உள்ளங்கள் தமது பொருளாதார பங்களிப்பை உதவிட முன் வந்திருப்பது மகிழ்ச்சியான விடயமாக அமைந்துள்ளது. எனினும் அது முழுமை அடைவதற்கு பல பொருளாதார பலம் படைத்த நல்லுள்ளம் கொண்டோர் முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்விற்கு   சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நாட்டியக் கலைமணி திருமதி ஞானசுந்தரி வாசன் மற்றும் சங்கீத இரத்தினம் திருமதி அம்பிகா பாலகுமார் அவர்களும் கருத்துரை வழங்கியதுடன் இறுதியில் இசைக்கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் ஆசிரியர் பரதசூடாமணி திருமதி கௌசலா ஆனந்தராஜா அவர்களுக்கும் நாட்டிய நர்த்தகி செல்வி கார்த்திகாவின் பெற்றோர் திரு திருமதி இராஜநாயகம் சௌந்தரராணி அவர்களால் பொன்ஆடை போற்றி பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் 


பாரிசில் கவிதாயினி பொன் மஞ்சுளா அவர்களின் கவிதை நூல் வெளியீட்டுவிழா மிகவும் ஒரு விதமான அனுதாப அலையுடன் பல மக்களின் ஒத்தாசையுடன் நடைபெற்றது

வேகமாகப் பரவி வரும் கணனி யுகத்தில் நூல் வெளியீட்டு விழா புலம் பெயர் தேசமெங்கும் பரவலாக டம் பெறுகின்றனஇந்த வகையில் பொன் மஞ்சுளா அவர்களின் நூல் வெளியீட்டு விழா ஒரு மைல் கல்லாகஅமைந்தது எனக் கூறலாம்.

மாலை 5.00 மணிக்கு அகவணக்கத்துடன் விழா ஆரம்பமானது. பின்னர் திருமதி.பொன்னையா லில்லி திரேசா (கவிதாயினி பொன் மஞ்சுளாவின் தாயார்) மற்றும் பொன் மஞ்சுளாவின் மூன்று பிள்ளைகளும் மற்றும் திருமதி அகிலா சிவராஐசிங்கம்(இளைப்பாறிய பிரெஞ்சு இராணுவப் பிரிவின் அருங்காட்சியக சீருடை வடிவமைப்பாளர்) ஆகியோரால் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது. 

பின்னர் வித்துவான் வேந்தனார் அவர்களின் செந்தமிழ்த் தாய் வாழ்த்து செல்வி.பிருந்தா நடராசா அவர்களால் பாடப் பெற்றது. இதன் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது ஒரு பண்பியலை வெளிக்காட்டியது.

பின்னர் அப்பையா யோகநாதன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு.குகன் குணரெத்தினம் (சமூக சேவையாளர்) அவர்கள் உரையாற்றினார் அத்துடன் நூல் வெளியீட்டு விழாவை அவரே தலைமை தாங்கி நடத்தி வைத்தார் .

 கவிதைப் பத்தகத்தின் தலைப்பு எல்லோரையும் கடந்த கால நிகழ்வுகளை நினைக்க வைக்கிறதெனவும் ஒவ்வொருவருக்கும் ஆத்மார்த்தமான  எண்ண அலைகள் தேடி வந்து தாக்கும் அளவுக்கு புத்தகத்தின் தலைப்பு அமைந்திருக்கிறதென தெரிவித்தார். கவிதைகள் ஒவ்வொன்றும் சமூகத்தையும் தேசத்தையும் காதலையும் கருணையையும்  மனித நேயத்தையும் நோக்கி மிகவும் மிதப்ப மிக்க சொற்களால் புனையப்பட்டிருப்பதாகக் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நூல் பற்றிய கருத்துப் பகிர்வை கவிஞர் தமிழ்மணி திரு.செல்லையா தேவன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். கருத்குப் பகிர்வில் பொன் மஞ்சுளா அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடும் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளும் உருவாக்கிய உணர்வின் வெளிப்பாடு கவிதைகளாய் பிறந்திருப்பதாச் சொன்னார்.

அடுத்து இலக்கியவாதியும் கவிதாயினியும் சிறுகதை எழுத்தாளருமான திருமதி.தமிழ்ப் பிரியா இயங்கோவன் அவர்கள் கருத்துப் பகிர்வை தொடங்கி வைத்தார். தான் பெண்ணாக இருந்து கொண்டு பொன் மஞ்சுளாவின் கவிதை வரிகளை பார்த்தவுடன் அத்தனை சோகங்களையும் சுமைகளையும் தாங்கிய நிலையில் இவ்வளவு வலி சுமந்த அனுபவமே அவரால் இந்த வலிசுமந்த வரிகளைப் பிரசவிக்க முடிந்ததாகக் கூறினார் . மேலும்  தனது பல கோணப் பார்வையில் கவிதை நூலின் அமைவு அளப்பரியது எனத் தெரிவித்தார்.

பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது முதலாவது பிரதியை பெற்றுக் கொண்டவர் பாஸ்கரன் செல்லத்துரை (இலங்கை பழையமாணவர் சங்க ஒன்றியத் தலைவர்) இரண்டாவது பிரதியை பெற்றுக் கொண்டவர் திருமதி அகிலா சிவராஐசிங்கம் இளைப்பாறிய (பிரெஞ்சு இராணுவப் பிரிவின் அருங்காட்சியக சீருடை வடிவமைப்பாளர்). மூன்றாவது பிரதியை ஊடகவியலாளர் இரா.தில்லைநாயகம்  பெற்றுக் கொண்டதுடன் கருத்துரை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து கவிதாயினி பொன் மஞ்சுளாஅவர்கள் நன்றி ஏற்புரை வழங்கி அனைவருக்கமாக நன்றி தெரிவித்தார் ஏற்புரையின் போது தனக்குதொடராக ஏற்பட்ட வேதனை நிறைந்த நிகழ்வுகளும் அனுபவங்களும் சமூதாயத்திற்கெதிரான அநீதிகளுமே தன்னை ஒரு கவிராக்கியது எனக் கூறிய போது சபை சத்தமின்றி அமைதியாக இருந்து கரகோஷம் மூலம் தமது ஆதரவை வெளிப்படுத்தி உற்சாகம் கொடுத்தனர்