Articles by "விபத்துச் செய்திகள்"
Showing posts with label விபத்துச் செய்திகள். Show all posts

(மண்டூர் ஷமி)

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓசாணம் வீதி சத்துருக்கொண்டான் மற்றும் சர்வோதய வீதி சத்துருக்கொண்டான் பிரதேசத்தைச் சேர்ந்த (18) வயதுடைய தோமஸ் விஜயசாத் மற்றும் (20) வயதுடைய புலேந்திரன் புறுசிகன் என்பவர்களே இவ்விபத்தில் சம்பவ இடத்தில் பலியானவர்களே

சம்பவ தினத்தன்று செங்கலடி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தங்களது மோட்டார் சைக்கிளை வரிசையில் நின்று நிறுத்தி விட்டு மற்றுமொருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துன்கொண்டு தன்னாமுனை பிரதான வீதியூடாக இருவரும் சென்று கொண்டிருக்கும் போது வீதியூடாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிராக வந்த கனகரக வாகனத்தில் மோதியதில் இரு இளைஞர்களும் சம்ப இடத்தில் பலியாகதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

(ஷமி மண்டூர்)

காத்தாங்குடிபொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவக்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளம் யுவதியான சுவிஸ்கிராமம் திரையாய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி வயது (21) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நம்பவம் நேற்று (21) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து உறவினர் ஒருவருடன் ஆடைத்தொழிச்சாலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை குறுக்கிட்ட மற்றுமோர் மோட்டார் சைக்கிளை கண்டு அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது பின்னிருந்த யுவதி தவறுதலாக் வீதியில் வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (20) அன்று உயிரிழந்துள்ளதான விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற  நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

சேருனுவர  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சிலம்பற்று பிதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வேலுப்பிள்ளை புவனேந்திரன் (48) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று(24) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி தனது உறவினர்களுடன் இலங்கைத்துறை மீட்னாட்சி அம்மன் கோயிலுக்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னோக்கி வந்த அதிசொகுசு வாகனம் மோதியதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திளசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருனுவர  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 

மட்டு சந்திவெயில் சம்பவம்

த.தவக்குமார்

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதான வீதியினை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் படுகாயம் அடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்னர்.

சத்தார் வீதி மாவடிவேம்பு-02 எனும் முகவரியினை சேர்ந்த செல்லன் அருணாச்சலன் வயது (61) செங்கலடி பிரதாக வீதியூடாக வாழைச்சேனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதே வீதியூடாக துவிச்சக்கர வண்டியூடாக வீதியினை கடக்க முற்பட்ட குறித்த நபர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில்  சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர்; பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

மட்டு பூநெச்சிமுனையில் சம்பவம்

த.தவக்குமார்

தனக்குத்தானே தீயிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்த இளம் குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நெச்சிமுனை இசைநடனக்கல்லூரி வீதி,முதலாம் குறுக்கு வீதியினைச்சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான அஜந்தன் லோஜினி வயது (27) என்பவரே நேற்று (7) மாலை கணவருடன் ஏற்பட்ட சிறு தகராற்றினால் தனக்குத்தானே மண்ணெண்னையினை ஊற்றி தனது வீட்டின் அறையில் தீயிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் தீக்காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக விசாரணையின் போது அறியமுடிந்துள்ளது.


மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுணதீவில் சோகம்

(த.தவக்குமார்)

வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாவடித்தீவு,நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ரதி-சிறிக்காந் என்பவர் தனது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பலியான சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து மட்டு நகரத்திற்கு தனது சகோதரியுடன் சென்று பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு தனது வீடு திரும்பிய நிலையில்; தனது வீட்டில் பாதுகாப்புக்காக வைத்திருந்த உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தான் யாரிடம் சொல்லாமல் எடுத்து தனது வீட்டிலிருந்து வீதியினூடாக குறித்த யுவதி தலைக்கவசம் இல்லாமல் ஓட்டிச்சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின்சார தூணில் மோதியதால் சம்பவ இடத்தில் படுகாயமடைந்து நாவக்காடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்







 

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த ரயிலுடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சோந்த 25 வயதுடைய விக்கினேஸ்வரராஜா சதூசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அதிகாலை 4 மணியளவில் கொழும்பல் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று (17.02.2021) காலை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை திசையிலிருந்து இன்று காலை 07.45 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று மட்டக்களப்பு நாவற்குடா தொழில நுட்பக்கல்லூரிக்கு முன்னால் யூ வளைவில் திரும்பியபோதே குறித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் 1990 அம்புலன்ஸ் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து காத்தான்குடி மோட்டார் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






 

மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில்) காலையில் பெக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன் அதில் பின்னால் இருந்து வந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று(17)இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை கல்முனைக்குடி 9 ஆம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முஹமட் பசில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஊறணியில் இருந்து திருப்பெரும்துறையை நோக்கி பயணித்த பெக்கோ இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் அதில் பின்னிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த 63 வயதுடைய முஹமட் பசீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் பெக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





 


 

பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற வேன் ஒன்று முன்னாள் வந்த வேளாண்மை இயந்திரம் ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் வேன் சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.


ஸ்தலத்திற்கு விரைந்த 1990 சுவசரிய அவசர சேவைஇ பொத்துவில் பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து வேனில் அகப்பட்ட சடலத்தை மீட்டு தற்போது மேலதிக நடவடிக்கைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

 

(த.தவக்குமார்)

தைப்பொங்கல் தினத்தன்று பழங்கள் வாங்கச்சென்ற இளம் குடும்பஸ்தர் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நம்பவம் நேற்று (14) இடம்பெற்று;ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி எரிவில் பிரதேசத்தைச்சேர்ந்த 41 வயதுடைய கருணாகரன் உதயகுமார் என்பவரே இவர் காரைதீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என்றும்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நடந்து பயணித்தவர் உட்பட ஐவர் மீது மோதியதுடன் இரண்டு கடைகளும் சேதத்திற்குள்ளாகிருந்தது.

அதில் மேற்படி உயிரிழந்தவர் களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கில் மோதியதால் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த நால்வரின் மூவர் பலத்த காயங்களுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்குடி பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.



 

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் விபத்தில் உயிரிழந்த 3 பேரினதும் உடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று முந்தினம் (19) மாலை குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

வவுனிக்குளம் வான் பாய ஆரம்பித்துள்ள நிலையில் அதனை பார்வையிட செல்வதற்கான மகனின் கோரிக்கையை ஏற்று தந்தையும் (வயது 38) மகனும் (வயது 13) மகளும் (வயது 3 ) அயல்வீட்டில் வசிக்கும் மகனின் நண்பனும் (வயது -13 ) நான்கு பேரும் வவுனிக்குளம் கலிங்கு நோக்கி பயணித்துள்ளனர். வீட்டில் இருந்து பயணிக்கும் போது மழை பொழிந்து கொண்டிருந்ததாகவும் வாகனத்தின் சாரதி பக்கமான முன் சில்லு காற்று போனதனால் வாகனம் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான தாகவும் சம்பவத்தில் உயிர் தப்பி கரை வந்த சிறுவன் ரவீந்திரன் -பிரவீன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில்இ வாகனத்தில் பயணம் செய்த குறித்த குடும்பஸ்தரின் மகன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார்இ இராணுவத்தினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து அயல்வீட்டில் வசிக்கும் மகனின் நண்பன் சுய நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார் .

அதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தி சென்ற தந்தையும் அவரது மூன்று வயது மகள் ஆகியோரை தேடும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில்இ நேற்று அதிகாலை 1 மணியளவில் கடற்படையினரின் சுழியோடிகளின் உதவியுடன் அவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் மூன்று பெயரினுடைய சடலங்களும் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று மாலை வவுனிக்குளம் – செல்வபுரம்- நெல்லுப்புலவு கிராமத்தில் அமைந்துள்ள அவர்களின் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது இவர்கள் மூன்று பெயரினுடைய இறுதிக்கிரியைகள் இன்று (21) மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க






 

(த.தவக்குமார்)

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் கொண்டு சென்ற ரயிலில் மட்டக்களப்பு சந்திவெளியில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை(24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனா

சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்ற ரயிலில்  சந்திவெளியில் பகுதியில் காலை 4.50 மணியளவில் மோதி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

( த.தவக்குமார் )

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஜே.பி.வீதி,புதுக்குடியிருப்பைச்சேர்ந்த மாணிக்கப்போடி-வல்லிபுரம்(68) சிகிச்சை பலனின்றி நேற்று(7) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29ம் திகதி தனது  வயலினை பார்ப்பதற்காக கச்சேனை பிரதேசத்திற்கு தனது துவிச்சக்கர வண்டியில சென்று அங்கிருந்து ஐந்து நாட்களுக்கு பின்னர் தனது வீடு திரும்பி வரும் போது புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் பயணித்திருந்த மோட்டார் சைக்கிள் குறித் நபர் மீது மோதியதில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (7) உயிரிழந்துள்ளார்.விபத்தினை ஏற்படுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பொறுப்பதிகாரி க.யோகானந்தன் அவர்களின் அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.


சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

(த.தவக்குமார்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வீபத்தில் சிக்கி பரிதாபகரமாக பலமாடுகள் இறந்தும் காயமடைந்துள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கனகரக வாகனம் மண்டூர் பிரதான வீதி ஊடாக வெல்லாவெளி நேக்கி சென்று கொண்டிருக்கும் போது இரவு வேளையில் மேச்சல் தரையில் இருந்து தங்களது தங்குமிடம் நோக்கி செல்வதற்கு வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கனகரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் இருமாடுகள் பலியானதுடன் மற்றும் நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் பலியான மாடுகள் மற்றும் கனகரக வாகனம் என்பவற்ரை வீதியில் இருந்து அகற்றியதுடன் சாரதி மற்றும் மாட்டு உரிமையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.











 


 த.தவக்குமார்

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை செங்கலடி நகர்ப்புற எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்இ வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் ஒன்று வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீதும்இ அவ் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சரியான பாதையில் சென்ற ஒருவரையும் மோதியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





 த.தவக்குமார்

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி புதுக்குடியிருப்பு பகுதியைச் நேர்ந்த கருணாகரன் சுலக்ஸ்சன் (25) மற்றும் கிருஷ்ணபிள்ளை நிலுக்ஸன் (20) ஆகிய இருவருமே தரத்தில் பலியாகியுள்ளனர்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்சுடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இரு இளைஞர்களும் நேருக்கு நேர் மோதியதில் தலத்தில் பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 த.தவக்குமார்
மண்டூரில் சோகச்சம்பவம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மட பிரதான வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கிய மண்டூரைச் சேர்ந்த இளைஞன் ஏகாம்பரம் சிசிக்குமார் (25) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று 26 உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்டூரில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் களுவாஞ்சிகுடி பிரதான வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது குருக்கள்மடம் பிரதான வீதியில் கட்டுபாட்டை இழந்து நேருக்கு நேர் பயணித்த காருடன் மோதியதில் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 (த.தவக்குமார்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகநேரிபிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சுற்றுலாவிடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் (16) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது அவரது பிலதேசத்தில் இட்மபெற்று வரும் ஆலய உற்சவம்மென்றில் கலந்து கொண்டு அரது வீடுநேக்கி சென்றுகொண்டிருக்கும் போது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப'பாட்டை இழந்து பாதையை வட்டு விலகியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 (த.தவக்குமார்)
வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பலியான சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த 17ம் திகதியன்று அவர்களின் தொழிலான கடற்தொழில் வேலைக்காக கடற்கரையை நோக்கி துவிச்சக்கரவண்டியில் குறித்த பிரதான வழியினூடாக சென்றுகொண்டிருந்த போது குறித்த வீதியினூடாக பின்நோக்கி கார் இவர்களை அடித்து சென்றுள்ளது.சம்பவ இடத்தில் படுகாயமடைந்த இருவரையும் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும வழியில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்ரைய நபரான இரு பிள்ளைகளின் தந்தையான சபாவதி ரவியேந்திரன்(26) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (18) மாலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
விபத்தினை ஏற்படுத்திய கார் சாரதி பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.