(த.தவக்குமார்)
தைப்பொங்கல் தினத்தன்று பழங்கள் வாங்கச்சென்ற இளம் குடும்பஸ்தர் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நம்பவம் நேற்று (14) இடம்பெற்று;ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி எரிவில் பிரதேசத்தைச்சேர்ந்த 41 வயதுடைய கருணாகரன் உதயகுமார் என்பவரே இவர் காரைதீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என்றும்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நடந்து பயணித்தவர் உட்பட ஐவர் மீது மோதியதுடன் இரண்டு கடைகளும் சேதத்திற்குள்ளாகிருந்தது.
அதில் மேற்படி உயிரிழந்தவர் களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கில் மோதியதால் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த நால்வரின் மூவர் பலத்த காயங்களுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்குடி பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours