மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில்) காலையில் பெக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன் அதில் பின்னால் இருந்து வந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று(17)இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை கல்முனைக்குடி 9 ஆம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முஹமட் பசில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஊறணியில் இருந்து திருப்பெரும்துறையை நோக்கி பயணித்த பெக்கோ இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் அதில் பின்னிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த 63 வயதுடைய முஹமட் பசீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பெக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Post A Comment:
0 comments so far,add yours