மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று (17.02.2021) காலை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை திசையிலிருந்து இன்று காலை 07.45 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று மட்டக்களப்பு நாவற்குடா தொழில நுட்பக்கல்லூரிக்கு முன்னால் யூ வளைவில் திரும்பியபோதே குறித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் 1990 அம்புலன்ஸ் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து காத்தான்குடி மோட்டார் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





Post A Comment:
0 comments so far,add yours