(த.தவக்குமார்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வீபத்தில் சிக்கி பரிதாபகரமாக பலமாடுகள் இறந்தும் காயமடைந்துள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கனகரக வாகனம் மண்டூர் பிரதான வீதி ஊடாக வெல்லாவெளி நேக்கி சென்று கொண்டிருக்கும் போது இரவு வேளையில் மேச்சல் தரையில் இருந்து தங்களது தங்குமிடம் நோக்கி செல்வதற்கு வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கனகரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் இருமாடுகள் பலியானதுடன் மற்றும் நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் பலியான மாடுகள் மற்றும் கனகரக வாகனம் என்பவற்ரை வீதியில் இருந்து அகற்றியதுடன் சாரதி மற்றும் மாட்டு உரிமையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.











 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours