த.தவக்குமார்

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை செங்கலடி நகர்ப்புற எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்இ வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் ஒன்று வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீதும்இ அவ் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சரியான பாதையில் சென்ற ஒருவரையும் மோதியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours