(மண்டூர் ஷமி)
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓசாணம் வீதி சத்துருக்கொண்டான் மற்றும் சர்வோதய வீதி சத்துருக்கொண்டான் பிரதேசத்தைச் சேர்ந்த (18) வயதுடைய தோமஸ் விஜயசாத் மற்றும் (20) வயதுடைய புலேந்திரன் புறுசிகன் என்பவர்களே இவ்விபத்தில் சம்பவ இடத்தில் பலியானவர்களே
சம்பவ தினத்தன்று செங்கலடி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தங்களது மோட்டார் சைக்கிளை வரிசையில் நின்று நிறுத்தி விட்டு மற்றுமொருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துன்கொண்டு தன்னாமுனை பிரதான வீதியூடாக இருவரும் சென்று கொண்டிருக்கும் போது வீதியூடாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிராக வந்த கனகரக வாகனத்தில் மோதியதில் இரு இளைஞர்களும் சம்ப இடத்தில் பலியாகதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours