காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி புதுக்குடியிருப்பு பகுதியைச் நேர்ந்த கருணாகரன் சுலக்ஸ்சன் (25) மற்றும் கிருஷ்ணபிள்ளை நிலுக்ஸன் (20) ஆகிய இருவருமே தரத்தில் பலியாகியுள்ளனர்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்சுடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இரு இளைஞர்களும் நேருக்கு நேர் மோதியதில் தலத்தில் பலியாகியுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours