சேருனுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சிலம்பற்று பிதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வேலுப்பிள்ளை புவனேந்திரன் (48) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று(24) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ம் திகதி தனது உறவினர்களுடன் இலங்கைத்துறை மீட்னாட்சி அம்மன் கோயிலுக்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னோக்கி வந்த அதிசொகுசு வாகனம் மோதியதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திளசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours