இதுவரை பாடசாலைகளை முழுமையாக மூடுவது பற்றிய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடுவதா இல்லையா என்பது பற்றிய விசேட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் நிலைமையை அவதானித்து திங்கட்கிழமை மீளாய்வுசெய்து கலந்துரையாடலை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours