களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி,கோட்டைக்கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருபைராசா என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு நேற்று (24) தற்கொலை செய்து கொண்;ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் குடும்பதகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே களுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மரணமானவரின் மரணத்தில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் கௌரவ கே.ஜீவராணி அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பிரிசோதனைக்கு உட்படுத்தும் படியும் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours