பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்
பாரிசில் கவிதாயினி பொன் மஞ்சுளா அவர்களின் கவிதை நூல் வெளியீ ட்டுவிழா மிகவும் ஒரு விதமான அனு தாப அலையுடன் பல மக்களின் ஒத்தா சையுடன் நடைபெற்றது. வேகமாகப் பரவி வரும் கணனி யுகத்தில் நூல் வெளியீட்டு விழா பு லம் பெயர் தேசமெங்கும் பரவலாக இ டம் பெறுகின்றன. இந்த வகையில் பொ ன் மஞ்சுளா அவர்களின் நூல் வெளி யீட்டு விழா ஒரு மைல் கல்லாகஅமை ந்தது எனக் கூறலாம். மாலை 5.00 மணிக்கு அகவணக்கத்துடன் விழா ஆரம்பமானது. பின்னர் திருமதி.பொன்னையா லில்லி திரேசா (கவிதாயினி பொன் மஞ்சுளாவின் தாயார்) மற்றும் பொன் மஞ்சுளாவின் மூன்று பிள்ளைகளும் மற்றும் திருமதி அகிலா சிவராஐசிங்கம்(இளைப்பாறிய பிரெஞ்சு இராணுவப் பிரிவின் அருங்காட்சியக சீருடை வடிவமைப்பாளர்) ஆகியோரால் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது.பின்னர் வித்துவான் வேந்தனார் அவர்களின் செந்தமிழ்த் தாய் வாழ்த்து செல்வி.பிருந்தா நடராசா அவர்களால் பாடப் பெற்றது. இதன் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது ஒரு பண்பியலை வெளிக்காட்டியது.பின்னர் அப்பையா யோகநாதன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு.குகன் குணரெத்தினம் (சமூக சேவையாளர்) அவர்கள் உரையாற்றினார் அத்துடன் நூல் வெளியீட்டு விழாவை அவரே தலைமை தாங்கி நடத்தி வைத்தார் .கவிதைப் பத்தகத்தின் தலைப்பு எல்லோரையும் கடந்த கால நிகழ்வுகளை நினைக்க வைக்கிறதெனவும் ஒவ்வொருவருக்கும் ஆத்மார்த்தமான எண்ண அலைகள் தேடி வந்து தாக்கும் அளவுக்கு புத்தகத்தின் தலைப்பு அமைந்திருக்கிறதென தெரிவித்தார். கவிதைகள் ஒவ்வொன்றும் சமூகத்தையும் தேசத்தையும் காதலையும் கருணையையும் மனித நேயத்தையும் நோக்கி மிகவும் மிதப்ப மிக்க சொற்களால் புனையப்பட்டிருப்பதாகக் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து நூல் பற்றிய கருத்துப் பகிர்வை கவிஞர் தமிழ்மணி திரு.செல்லையா தேவன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். கருத்குப் பகிர்வில் பொன் மஞ்சுளா அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடும் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளும் உருவாக்கிய உணர்வின் வெளிப்பாடு கவிதைகளாய் பிறந்திருப்பதாச் சொன்னார்.
அடுத்து இலக்கியவாதியும் கவிதாயினியும் சிறுகதை எழுத்தாளருமான திருமதி.தமிழ்ப் பிரியா இயங்கோவன் அவர்கள் கருத்துப் பகிர்வை தொடங்கி வைத்தார். தான் பெண்ணாக இருந்து கொண்டு பொன் மஞ்சுளாவின் கவிதை வரிகளை பார்த்தவுடன் அத்தனை சோகங்களையும் சுமைகளையும் தாங்கிய நிலையில் இவ்வளவு வலி சுமந்த அனுபவமே அவரால் இந்த வலிசுமந்த வரிகளைப் பிரசவிக்க முடிந்ததாகக் கூறினார் . மேலும் தனது பல கோணப் பார்வையில் கவிதை நூலின் அமைவு அளப்பரியது எனத் தெரிவித்தார்.பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது முதலாவது பிரதியை பெற்றுக் கொண்டவர் பாஸ்கரன் செல்லத்துரை (இலங்கை பழையமாணவர் சங்க ஒன்றியத் தலைவர்) இரண்டாவது பிரதியை பெற்றுக் கொண்டவர் திருமதி அகிலா சிவராஐசிங்கம் இளைப்பாறிய (பிரெஞ்சு இராணுவப் பிரிவின் அருங்காட்சியக சீருடை வடிவமைப்பாளர்). மூன்றாவது பிரதியை ஊடகவியலாளர் இரா.தில்லைநாயகம் பெற்றுக் கொண்டதுடன் கருத்துரை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.நூல் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து கவிதாயினி பொன் மஞ்சுளாஅவர்கள் நன்றி ஏற்புரை வழங்கி அனைவருக்கமாக நன்றி தெரிவித்தார் ஏற்புரையின் போது தனக்குதொடராக ஏற்பட்ட வேதனை நிறைந்த நிகழ்வுகளும் அனுபவங்களும் சமூதாயத்திற்கெதிரான அநீதிகளுமே தன்னை ஒரு கவிராக்கியது எனக் கூறிய போது சபை சத்தமின்றி அமைதியாக இருந்து கரகோஷம் மூலம் தமது ஆதரவை வெளிப்படுத்தி உற்சாகம் கொடுத்தனர்









Post A Comment:
0 comments so far,add yours