பகிடிவதை குற்றம் சாட்டப்பட்ட உருகுணை பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு (திங்கட்கிழமை) மாத்தறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 19 மாணவர்களையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக உருகுணை பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் உட்பட 19 மாணவர்கள் மீது குற்றம் சட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours