சர்வதேச கிரிக்கெட் சபையின் இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 86 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை திமுத் கருணாரத்ன அடைந்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் 77 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours