(த.தவக்குமார்)
இந்த ஆண்டுக்கான 3வது பிரதேச சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் காரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்று (16) பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.டி. ஜாசுகி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.






Post A Comment:
0 comments so far,add yours