(க.விஜயரெத்தினம்)
கொழும்பு பாமன்கடை லேன் கார்ப்பெட் வசதியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களின் பிரேரணையின் பிரகாரம் கொழும்பு 06, வெள்ளவத்தை - பாமன்கடை லேன் காபட் இடப்பட்டு, மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் பெண்களுக்கு சுயதொழிலுக்காக தையல் இயந்திரங்களை வழங்கும் வைபவம்  (15.09.2019) வெள்ளவத்தை பாமன்கடை லேனில் இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களின் அழைப்பின் பேரில், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் கெளரவ இசுரு தேவரப்பிரிய அவர்களின் பங்குபற்றுதலுடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும், கொழும்பு மாவட்ட தலைவருமான கெளரவ திலங்க சுமதிபால அவர்களின் தலைமையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours