(-க. விஜயரெத்தினம்)
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் தேரோட்டத்தைச் சிறப்பிக்க மக்கள் வங்கியினால் தாகசாந்தி தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாகசாந்தி அடியவர்களுக்கு வழங்கப்பட்டது.


மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் தேரோட்டத்தையொட்டி மட்டக்களப்பு பிராந்திய மக்கள் வங்கியின் அனைத்து ஊழியர்களினுடைய ஏற்பாட்டில் நேற்றைய நாள்(15) முழுவதும் தாக சாந்தித் தண்ணீர்ப் பந்தல் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பங்கு கொண்டனர்.

மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள கிளைகளின் முகாமையாளர்கள்,உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டதுடன், கொக்கட்டிச்சோலை ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கு.சச்சிதானந்தக்குருக்கள், பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், ஆலயபரிபால சபையினர் உள்ளிட்ட பலரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் தண்ணீர் பந்தலானது வருடா வருடம் மக்கள் வங்கியினால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours