நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என்று ராஜபக்ஷக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 


குருணாகலில்  இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது : 
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் என்னை சந்தித்து பொதுஜன பெரமுன - சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பில் கலந்துரையாடினார்கள். 
அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்தேன். 
தற்போது நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமே மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்படுகின்றது. எனவே கட்சியின் தனித்துவத்தை காட்டிக் கொடுத்து நாம் யாருக்கும் ஆதவளிக்கப் போவதில்லை. ஆனால் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர கட்சி இன்றி இந்த நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours