(காரைதீவு நிருபர்சகா)
வெந்தணலில் வேகாதது எதுவுமில்லை. வீரவிறகுக்கட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு தீமூட்டப்பட்டு வானளாவ எழுந்து தீப்பிழம்பு கனல் பறக்கும் இடத்தில் நிற்கும் வேம்புமரத்திலுள்ள ஒரு இலைகூட கருகவில்லை. கடைசி இலைநுனி இலை துளிர் கூட கருகவில்லை. இது சாத்தியமா? தீக்குழிஅருகினிலே நிற்கமுடியாமல் தூர நிற்போர் ஒரு புறம் அருகிலிருந்து தீக்குழி சரிசெய்வோர் நீருற்றியவண்ணம் அமர்ந்திருப்பது மறுபுறம்.


இத்தனைக்கும் மத்தியில் அந்தமரத்தின் கீழ் மூட்டப்படும் பாரியதீக்குழியிலிருந்து எழும் தீச்சுவாலை அங்குள்ள அம்மனினின் வேம்புமரத்தை சற்றும் பாதிக்கவில்லை. கடைசி ஓரு துளிர் கூட கருகவில்லை என்றால் என்ன அற்புதம்?

இச்சம்பவம் வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு நிகழ்வு  (29) ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிக்கு  சிறப்பாக நடைபெற்றது. அங்கேயே இவ் அற்புதச்சம்பவம் இடம்பெற்றது. வேம்புமரம் எதுவிதபாதிப்பில்லாமலிருப்பதையும் மரத்தின்கீழிருந்து பக்தர்கள் தீமிதிப்பு வைபவத்தை கண்டுகளிப்பதையும்  காணலாம்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours