எஸ்.குமணன்
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது மாவடி வீதி பகுதியில்
ஞாயிற்றுக்கிழமை (29) மாலை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கல்முனை பொலிஸ் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் உப பொலிஸ் பரிசோதகர் அனுஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கஞ்சாவினை கைப்பற்றினர்.
இதன் போது மேற்குறித்த இரு மாடிகளை கொண்ட வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்து நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை பறிமுதல் செய்ததுடன் வீட்டில் குடியிருந்த ஒருவர் கைதாகி அவ்விடத்தில் விசாரணைக்கு உள்ளானார்.
அண்மைக் காலமாக குறித்த பகுதியில் அதிகளவான போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பன அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அத்துடன் மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 30 இலட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

Post A Comment:
0 comments so far,add yours