வடக்கு, கிழக்குக்கு நான் சென்ற வேளைகளில் அங்குள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் என்னையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று நேரில் தெரிவித்தார்கள். அவர்களின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. எனவே, அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்."
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
"எனது நோக்கங்கள், திட்டங்கள் தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நான் நேரில் பேச்சு நடத்தவுள்ளேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
'ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். எனவே, தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்குமா?' என்று அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours