(எஸ்.குமணன்,காரைதீவு நிருபர் சகா)


முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளைதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக  அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது .



 வெள்ளிக்கிழமை( 27) காலை 10 மணியளவில்     இந்த போராட்டமானது வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.    




சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துக இஅனைத்துவிதமான பாரபட்சங்களை ஒழிக்குக இசிறுபான்மையினர் மீதான துஷ்பிரயோகங்களை நிறுத்துக போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.   முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைது செய்யகோரியும் இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  நீராவியடியில் செத்தது நீதி நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுங்கள்சட்ட ஆட்சியை நிலைநிறுத்துங்கள்இ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன்கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.



இதன்போது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் சதுக்கத்திலிருந்து பேரணியாக காரைதீவு பிரதேச செயலகம் வரை சென்று மீண்டும் சுவாமி  விபுலாநந்தர் சதுக்கத்தை வந்தடைந்து .


 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர்இஸ்ஸதீன் லத்தீப்பிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

இந்த கண்டன பேரணியில்  வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினர்  பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours