(த.தவக்குமார்)
கலாச்சார அலுவல்கள் திணைக்களமும்இ காரைதீவு பிரதேச செயலக கலாச்சார பிரிவும் இணைந்து உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான சிறந்த வளவாளர்கள கொண்டு நடாத்திய 'பன்னிரண்டு மாத விளக்கு ' வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக கவிதைக்களம் பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (23) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.என்.றின்ஸான் அவர்களும், வளவாளர்களாக காரைதீவு உதவி கல்வி பணிப்பாளர் கே.வரதராஜன் அவர்களும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் செயலாளர் எஸ். நாகராஜா அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வு பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்னேஸ்வரன் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது.












Share To:

Post A Comment:

0 comments so far,add yours