(சதீஸ்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையம் செவ்வாய்க்கிழமை (10ம் திகதி) திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டடத்தினை திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலைய கட்டிடமே திறக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச இணைத்தலைவர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் சிவனந்தம் சிறிதரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் சோ.சுரநுதன் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours