மட்டக்களப்பு திருச்செந்தூர் இரண்டாம் குறுக்கில் வசிக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் மகாலிங்கம் டிலக்சன் (டினேஸ்) என்பவர் இனந்தெரியா நபர்களினால் அச்சுறுத்தப்பட்டதாக இன்று 30ஆம் திகதி மட்டக்களப்பு மனித உரிமை மீறல் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக மனித உரிமை மீறல் அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் குறித்த ஊடகவியளாளரிடம் செய்திப்பிரிவின் மூலமாக வினவிய போது கடந்த 26.09.2019 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் எனது வீட்டிற்கு 2 மோட்டார் வண்டியில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் எனது வீட்டுக்கதவை தட்டி எனது பெயரை கூறி வெளியில் வரும்படியும் நான் ஊடக தொழிலில் தேவையற்ற செய்திகள் பிரசுரிப்பதாகவும் தேசத்தின் வேர்கள் அமைப்புடன் இணைந்து முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்ப உறுப்பினர்களை மற்றும் காணாமாலாக்கப்பட்டோர் சங்க அங்கத்தவர்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்து நடாத்திவருவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் பல ஊடகவியளாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அது போல் காணாமல் ஆக்கப்படலாம் என சிங்கள மொழியில் அச்சுறுத்திச் சென்றனர்.
இது தொடர்பாக நான் மனித உரிமை மீறல் அலுவலகத்தின் ஆணையாளரிடம் சம்பவம் தொடர்பாக கூறினேன் அதற்கு முதலில் பொலிஸ் முறைப்பாடு இடுமாறும் பின்னர் மனித உரிமை மீறல் அலுவலகத்தில் முறைப்பாடு பதியுமாறும் கூறினார் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு பதிய சென்றபோது எனது முறைப்பாட்டை ஏற்கமறுத்தனர் காரணம் எதிராளி முறைப்பாட்டு காரர் யார் என தெரியாமல் எவ்வாறு முறைப்பாடு பதிவது என மறுத்தனர்.
அதன் பின்னர் 29.09.2019 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு நான் வீடு திரும்பும் வழியில் இரண்டு நபர்கள் என்னை மறித்து சிங்கள மொழியில் நான் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் செய்திகள் பிரசுரிப்பதாகவும் இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் மீண்டும் முன்னாள் போராளிகளை இணைத்து செயற்பட்டு வருவதாக இருந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் நடக்கலாம் அதற்கு குடும்பத்துடன் கவணமாக இருக்கும்படி அச்சுறுத்திச் சென்றனர்.
அதன் பின்னர் தான் நான் மனித உரிமை மீறல் அலுவலகத்தின் ஆணையாளரிடம் கூறுய பின்னர் 30.09.2019 ஆம் திகதி HRC/BCO/505/2019 என்ற இலக்க முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளேன் அதன் பிரகாரம் பொலிஸாரிடம் விசாரிப்பதாகவும் கூறினர் என அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர் மகாலிங்கம் டிலக்சன் (டினேஸ்) எமது செய்தி தளத்திற்கு கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours