(த.தவக்குமார்)
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்தில் பயனாளி குடும்பங்களுக்கான உடல் மற்றும் மனநல மேம்பாட்டு திட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு .சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர்கள் ஜனாப். எம்.எம்.அச்சு முஹம்மட் மற்றும் சமுர்த்தி சங்க உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவளத்துணை உதவியாளர் ஜனாப்.மனாஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வு சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் ஜனாப். எம்.ஐ. எம். பாயிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.






Share To:

Post A Comment:

0 comments so far,add yours