(சா.நடனசபேசன்)
தியாகி திலிபன் தமிழீழம் கேட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை சாதாரணமான ஐந்து அம்சக்கோரிக்கை வைத்தே உண்ணாவிரதம் மேற்கொண்டார் அதைகூட இந்தியஅரசு செய்யவில்லை.
தியாகி திலீபன் தியாகம் மகாத்மாகாந்தியின் தியாகத்தை விட உயர்வானது அதற்கு மாற்றுக்கருத்தில்லை என்றார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.
தியாகி திலீபனின் 32இவது வணக்க நிகழ்வு வெல்லாவெளியில் (15) ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது அங்கு கலந்து கொண்டு மேலும் கூறுகையில்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் காரணமாக இந்தியபடைகள் இலங்கைக்கு வந்தபோது பல்வேறு நெருக்கடிகளை எமதுமக்கள் சந்தித்தனர்.
அந்த நெருக்கடிகளை தீர்க்கும் பொருட்டே ஐந்து அம்ணக்கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலிபன் உண்ணாவிரதம் இருந்தார் அவர்முன்வைத்த கோரிக்கைகள்
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
தியாகி திலிபன் தமிழீழம் கேட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை சாதாரமாண ஐந்து கோரிக்கைகள் இதனை கூட தீர்க முடியாமல் காந்தியம் பேசும் பாரதநாடு காந்தியம் வழியில் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலிபனின் கோரிக்கையை உதாசீனம் செய்தமையால் நல்லூர் கோயில் வளாகத்தில அவர் உயிர் பிரிந்தது.
மருத்துவபீட மாணவனாக இருந்த திலிபன் ஈழவிடுதலை போராட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளில் ஒரு போராளியாக இணைந்து செயல்பட்டவர்.பற்றுறிதியும் விடுதலை உணர்வும் கொண்ட இளைஞனாக அஞ்சாநெஞ்சம் கொண்டு ஆயுதமுனை போராளியாக செயல்பட்டு அகிம்சை போராட்டம் என்றால் என்ன என்பதற்கு இலக கணம் வகுத்த செயல் வீரன் 32.வருடத்திற்கு முன் உண்ணாவிரதப்போராட்டத்தை இன்றய நாளான அன்று 1987 செப்டம்பர் 15இ ம் திகதி நல்லூர் கோயிலில் ஆரம்பித்தார்.
அன்று அந்த போராட்டத்தை ஆரம்பிக்கும்போது
ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன்இ உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் வயதான ஒரு மஅம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார் . உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சே குவேரா இ பிடல் காஸ்ட்ரோஇ யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப் பட்டது. தொடர்ந்து கவிதைகள் இ உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார் . அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார்.
அடுத்நாள் அதற்கு அடுத்த நாள் என பதினொரு நாட்கள் தியாகி திலிபன் படிப்படியாக உயிர் ஊசலாடி இறுதியாக 1987 செப்டம்பர் 26இம் உயிர் முற்றாக பிரிந்தது.
இன்று 32இவருடங்கள் கடந்தபோதும் எமக்கான உரிமை எமக்கானவிடிவு எமக்கான சுதந்திரம் எமக்கானதீர்வு எதுவுமே கிடைக்கவில்லை தியாகி திலிபன் எந்த நோக்கத்துக்காக உயிர் தியாகம் செய்தானோ அந்த நோக்கம் எட்டப்படவில்லை அதற்கான முயற்சிகள் தொடர்ந்தாலும் தீர்வு இல்லை.
ஆனால் எப்போ ஒருநாள் இந்த தியாகத்துக்கு பதில் கிடைத்தே தீரும் அந்த பதிலுக்காக நாம் தமிழ்தேசியத்தின் பலத்தை தொடர்ச்சியாக ஒற்றுமையாக காட்டவேண்டும் விடுதலை என்பது கடையில் வாங்கும் பொருளல்ல அதை அடைவதற்கு பல தடைகள் ஏமாற்றங்கள் சலிப்புகள் இப்படி வந்துகொண்டே இருக்கும் அதற்காக விலகி நின்று எமது பாதையை மாற்றமுடியாது இலக்குகள் எட்டப்படும்வரை இலட்சியத்தை பைவிடமுடியாது தமிழர்கள் பலம் தமிழ்தேசிய பலமாக மாற்ற ஒற்றுமையுடன் ஒருகுரலாக பயணிக்கவேண்டும்
தியாகி திலிபனுக்கு நாம் செலுத்தும் நினைவு வணக்கம் அவரின் எண்ணத்தை ஈடுசெய்யக்கூடியதாக அமையவேண்டும் இதுவே இவருக்கு நாம் செலுத்தும்
அஞ்சலியாகும் எனவும் மேலும் கூறினார்.

Post A Comment:
0 comments so far,add yours