(காரைதீவு நிருபர் சகா)
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை வருடாந்த மாபெரும் சிறுவர்தினவிழாவை அக்.1ஆம் திகதி சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடாத்தவுள்ளது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெறவுள்ள இப்பெருவிழாவில் கிழக்கு மாகாண கல்விகலாசார விளையாட்டுத்துறை தகவல்தொழினுட்ப முன்பள்ளி இளைஞர்விவகார புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
முன்னதாக வலயக்கல்விப்பணிமனை முன்றலிலிருந்து மாணவர்களின் விழிப்புணர்ச்சி ஊர்வலமும் நிறைவில் அல்மர்ஜான் மகளிர் கல்லூரிமண்டபத்தில் விழா நிகழ்வும் இடம்பெறும்.
கடந்தகாலங்களில் சம்மாந்துறை வலயத்தில் கல்விச்சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களில் சேவைமூப்பு அடிப்படையில் ஒவ்வொருபிரிவிலும் ஒருவராக ஏழு கல்விப்பணியாளர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளனர் .
சர்வதேச முதியோர் தினமாகும். இவ்வருட முதியோர்தின தொனிப்பொருள் வயது சமத்துவத்துக்கான பயணம்' என்பதாகும்.
வலயத்தில் ஏலவே கடமையாற்றி ஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் ஜ.எம்.இஸ்ஸதீன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எம்.அமீன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எ.எம்.மஜீட் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.செல்லத்துரை ஆசிரிய ஆலோசகர் எ.ம்.மஹ்றூப் அதிபர் இ.தங்கராசா ஆசிரியர் வை.பி.இஸ்மாலெவ்வை ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் தேசிய மாகாணமட்டங்களில் சாதனை புரிந்த 36மாணவர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளனர் .
Post A Comment:
0 comments so far,add yours