(காரைதீவு நிருபர் சகா)
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்த மென்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் வருடாந்த மாபெரும் சிறுவர்தினவிழா (அக்.1) செவ்வாயன்று பிற்பகல் 3மணியளவில் காரைதீவு கடற்கரையில் நடைபெறவுள்ளது.
மொன்டிசோரி ஆசிரியைகளான நிலாந்தினி ரம்யா தலைமையில் நடைபெறவுள்ள இப்பெருவிழாவில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கௌரவஅதிதியாகக்கலந்துகொள்கிறார் .
பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடன் கடற்கரையில் சிறுவர் விளையாட்டுப்போட்டி வழமைபோல் இடம்பெறும். அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
Post A Comment:
0 comments so far,add yours