(சதீஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை கிராமத்தில் குடிமகன் ஒருவரின் வீட்டு மதிலினை காட்டுயானைகள் சேதப்படுத்திச் சென்றுள்ளது.



இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினைத் தாண்டி நேற்று இரவு  வந்த காட்டுயானைகள் உன்னிச்சை 8ம் கட்டை பகுதியைச்சேர்ந்த பேரின்பராசா என்பவரது வீட்டு மதிலினை உடைத்து சேதம் செய்துள்ளது.

இச் சேதம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கிராம சேவையாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில்   முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இச் சேதத்திற்கு தனக்கு உரிய நஸ்டஈட்டை பெற்றுத்தருமாறும் இவர் கோரியுள்ளார்.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours