மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெட்டை வயல் பிரதேசத்தில் வியாழக்கிழமை மாலை இடி மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மீராவோடையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அச்சு முகம்மது ரம்ழான் வயது (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போது பெரும்போக வேளான்மை செய்கைக்கான ஆரம்ப வேலைகள் இப்பிரதேசத்தில் நடைபெறுவதனால் தமது வயலில் உழவு வேலையில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிக்கு உணவு வழங்க சென்றபோது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவிணர்களிடம் கையளிக்கப்பட்டது.

Post A Comment:
0 comments so far,add yours