(கலீல் மொகமட்)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எட்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை வரலாற்றில் தேர்தல்கள் திணைக்களம் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்ட கட்சிகளின் ளூழஉம வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளதை காணமுடியும்.
அந்த வகையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியும் ளூழஉம வேட்பாளர் ஒருவரை நிறுத்தும். 1994ம் ஆண்டு முதல் உள்ள அரசியல் வரலாற்றில் இந்த ளூழஉம வேட்பாளர்தான் வெற்றி பெற்றுள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் அதிர்ச்சி வேட்பாளராக இறங்கியே வெற்றி பெற்றார். 2005 இல் ரணில் விக்ரமசிங்கவை பெயரிட்டோம். மகிந்த ராஜபக்ஸ அதிர்ச்சி வேட்பாளராக வந்து வெற்றி பெற்றார். 2015 இல் மைத்திரிபால சிறிசேன வந்து வெற்றி பெற்றார்.' என அவர் மேலும் கூறியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours