த.தவக்குமார்
மாவற்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாதிரி வீடமைப்பு திட்டத்திற்கமைவாக பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தின் தலைவர் அ.சித்தார்த்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி மற்றும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தின் பிரதிநிதியான காசுபதி பெஞ்சனின்-பாலா,செல்வி.சீலா-பாலா கிராமசேவை உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக இக்கட்டிடம் அமைவதற்கான பெறப்பட்ட காணிக்கான ஆவணம் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

















Share To:

Post A Comment:

0 comments so far,add yours