காரைதீவு நிருபர் சகா
தமிழ்த்தேசியக்கூட்டடைப்பு இன்றும் தமிழ்மக்களால் நேசிக்கப்படுகிறதென்றால் துரைரட்ணசிங்கம் எம்.பி. போன்ற அணைக்கின்ற உள்ளங்களால்தான் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.
இந்நிகழ்வு சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் நேற்று(18)நடைபெற்றது. தவிசாளர் ஜெயசிறிலின் வேண்டுகோளின்பேரில் 1லட்சத்து 35ஆயிரம் ருபா பெறுமதியான போட்டோப்பிரதிசெய்யும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
அத்தருணம் நன்றிதெரிவித்து உரையாற்றிய தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசியதாவது:
துரைரெட்ணசிங்கம் எம்.பி. போன்றவர்கள் அனைவரையும் அணைத்துச்செல்கின்றவர்கள். தேசியபட்டியல் எம்பியாதலால் அம்பாறை மாவட்டத்திற்கு கேட்கின்றபோதெல்லாம் எதவிசெய்துவருகிறார்.
சமகாலத்தில் எமது கட்சிமீதான தமிழ்மக்களின் பார்வை சற்றுவக்ரமாக இருக்கின்போதிலும் துரைரெட்ணசிங்கம் போன்றவர்களால் இன்னும் கட்சி உயிர்வாழும்.நீடித்துநிலைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெறுமனே வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஏமாற்றுவது அழகல்ல. காலக்கெடுவிதிப்பதும் முறையல்ல.



Post A Comment:
0 comments so far,add yours