சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வாழும் சமூகசேவகர் சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களின் சொந்த நிதியின் மூலம் நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும்  நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அதிபர் எஸ்.சபாரெத்தினம் தலைமையில் நடைபெற்றது

இப்பாடசாலையில் வறுமைக்கோட்டின்  கீழ் வாழும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், உபதலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன்,கணக்குப்பரிசோதகர் எஸ்.நாகேந்திரன் உபசெயலாளரும் மகளீர் அமைப்பின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours