(க. விஜயரெத்தினம்)
கோப் குழுவில் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு.திகதியை மாற்றம் செய்த பின்னர் வெளிநாடு பறந்தார் ஹிஸ்புல்லாஹ்.

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பெட்டிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவில் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி கோப்குழுவிற்கான விசாரணை பிரிவுக்கான செயலத்தில் இதனைக் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(17) கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா முன்னிலையாகி இருக்கவில்லை.
வௌிநாட்டுத் தூதரக குழுவினருடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக  வௌிநாடு சென்றுள்ளதால் அவர்கள் கோப் குழுவில் ஆஜராகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தூதரக குழுவின் கூட்டத்தில் பங்கேற்றமை தொடர்பான எழுத்துமூலமான ஆவணத்துடன், எதிர்வரும் 9 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுனில் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்த ஹிஸ்புல்லாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட கோப்குழுவின் குறித்த திகதிக்கு சமூகமளிக்க முடியாதால் குறித்த திகதியை மாற்றித்தருமாறு ஹிப்புல்லா கோப்குழு செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours