(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் தேசிய மீலாதுன்நபி விழா போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட நிகழ்வுக்கு தெரிவு.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் தேசிய மீலாதுன்நபி விழா போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் எம்.ஆர்.எம்.ஹிஷாம் கல்முனை மஹ்மூத் பாலிகா மகாவித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்ற தேசிய மீலாதுன்நபி விழாப்போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தை தக்கவைத்து தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த போட்டிக்கான பொறுப்பாசிரியர் எம்.எம்.எஸ்.நஜீகா தெரிவித்தார்.

"தேசத்தை நேசிப்போம்" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றியே 1ம் இடத்தை தட்டிக்கொண்டு தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு தெரிவு செய்யப்பட மாணவனையும்,குறித்த போட்டிக்கு தயார்படுத்திய ஆசிரியர்களையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர் பாராட்டி கௌரவித்ததோடு நினைவுப்பரிசையும் வழங்கி வைத்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours