ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அடங்கிய முப்பது தொழிற்சங்கங்கள் செப்ரெம்பர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளன.
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தி
ன் (சி.டி.எஸ்.யூ) பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, வேலைநிறுத்தம் சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகப்படியான தேவையற்ற பணிச்சுமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதேபோன்ற காரணங்களுக்காக தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன, ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அதன்படி, செப்ரெம்பர் 26 ம் திகதி கோட்டை ரயில் நிலையம் எதிரே நடைபெறும் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்து கொள்வார்கள் என்று பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
இந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வை வழங்கினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours